மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 2837 மாணவர்கள் பலன்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்ட துவக்கி விழா ஏ வி சி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. திட்ட வங்கி அட்டையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார் .இவ்விழாவில் எம்எல்ஏக்கள் ராஜ்குமார் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் ஆகிய உட்பட உள்ளாட்சிப் பிரதிகள் கலந்து கொண்டனர்.
தமிழக முழுவதும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஏவிசி பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் "தமிழ்ப் புதல்வன்" திட்டம் இன்று துவங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதாமுருகன் , ராஜ்குமார் , பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு வங்கி அட்டைகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தனர். இந்தத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 2837 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். பின்னர் அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 1000 ரூபாய் பணத்தை மாணவர்கள் உடனடியாக பெற்றுக்கொண்டதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றம் எம்எல்ஏக்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக மாணவர்களிடம் தமிழ் புதல்வன் திட்டம் பற்றி பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறுகையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில் இந்தியாவில் இருக்கக்கூடிய உயர்கல்வி வாய்ப்புகள் , உலக நாடுகளின் ஆராய்ச்சிகள் , முப்படை துறைகள் உட்பட்ட பல்வேறு வகையான மாணவர்கள் முன்னேற்றத்திற்கான வழிகாட்டிகள் இடம் பெற்று இருப்பதாகவும். இதனை மாணவர்கள் பின்பற்றி சாதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்