மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 29பேர் மீது நடவடிக்கை
கன்னிவாடி அடர்ந்த வன பகுதியில் அனுமதி இன்றி மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 29 நபர்கள் மீது நடவடிக்கை ரூபாய் 1.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது;
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வன சரக பகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை காப்புக்காடு பகுதியில் நேற்று 20க்கும் மேற்பட்ட ஆண்கள் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வனத்துறையினர் உரிய அனுமதியின்றி வனப்பகுதியில் சட்ட விரோதமாக மலை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்ட 29 நபர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் ஒரு குழுவாக வந்திருந்த அனைவரும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்ட வனத்துறையினர் ஒவ்வொருக்கும் தலா ரூபாய் 4500 என ரூபாய் 1.30 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர் மேலும் யானைகள் காட்டுப்பன்றிகள் காட்டு மாடுகள் என காட்டு விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதிக்குள் இது போன்ற ஆபத்தான செயலில் ஈடுபட வேண்டாம் என அவர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.