பால் உற்பத்தியாளர்களின் 3வது பொது பேரவை கூட்டம் நடைபெற்றது
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தலைமையில் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 3-வது பொதுப்பேரவை கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலை, ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சியில் இன்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்/ நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய செயலாட்சியர், மருத்துவர் ச.உமா, முன்னிலையில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 3-வது பொதுப்பேரவை கூட்டம் நடைபெற்றது. கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகள் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும் விவசாயிகள் கால்நடைகள் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மாநில அளவில் தரமான பால் கொள்முதல் செய்வதிலும், களப்பணையாற்றுவதிலும் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். மேலும், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 17.12.2018 முதல் சேலம் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு புதிதாக செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் குறித்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கூட்டுறவு அமைப்பு என்பது ஒரு அரசாங்கத்திற்கு இணையாக ஒன்றாகும் என்ற கருத்தை தெரிவித்தேன். நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், சேலம் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு தனி நிறுவனமாக இயங்குவது குறித்து அறிக்கை தயாரித்து வழங்கப்பட்டு, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தனியாக செயல்படுவது குறித்தும், தனியாக ஜி.எஸ்.டி செலுத்தப்படுவது, வருமான வரி செலுத்துவது, தனியாக பால் உற்பத்தியாளர்கள் அமைப்பு, பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை உள்ளடக்கி உள்ளது என்பது குறிப்பிட்டு, ஏற்கனவே நாமக்கல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தனி நிறுவனமாக இயங்கி வருவது குறித்த சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் தான் தற்போது நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு சுமார் ரூ.7.00 கோடி மானியமாக பெற்று வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நாமக்கல் மாவட்டத்தில் நவீன பால் பண்ணை 2 இலட்சம் லிட்டர் கொள்ளளவில் அமைக்க திட்டமிடப்பட்டு, கால்நடை மருத்துவ கல்லூரியில் 13 ஏக்கர் நிலம் பெறப்பட்டு தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. உலக தரம் வாய்ந்த நவீன பால் பண்ணை நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட வேண்டுமென்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு தேசிய பால்வள வாரியமே பால் பண்ணை கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தனியாக அரசாணை வெளியிட்டார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.3.00 ஊக்கத்தொகை கூடுதலாக வழங்க உத்தரவிட்டதன் அடிப்படையில், நாமக்கல் பால் கூட்டுறவு ஒன்றியத்திற்கு 30,000 லிட்டர் பால் கூடுதலாக கிடைக்க பெறுகிறது. நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மாநில அளவில் தரமான பால் கொள்முதல் செய்வதில் முதலிடம் பெற்றுள்ளது. கூட்டுறவு சங்கப்பணியாளர்கள் தான் கூட்டுறவு அமைப்பின இதயம் போன்றவர்கள். தொடக்க பால் உற்பத்தியார்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள பணியாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து இந்த நிறுவனத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அனைத்து கூட்டுறவு சங்கங்களை பாதுகாப்பது கூட்டுறவு துறையின் மிக முக்கிய கடமையாகும். அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள். மேலும், அதிகளவில் பால் கொள்முதல் செய்கின்ற 20 கூட்டுறவு சங்கங்களுக்கு தரம் சோதனை கருவிகள் எனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்க முன்மொழிவுகள் சமர்பித்து ஆணைபெறப்பட்டு உடனடியாக கருவிகள் வழங்கபட உள்ளது. குறைந்த பட்சம் 300 முதல் 500 லிட்டர் கொள்முதல் செய்கின்ற சங்கங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட 10 சங்கங்களுக்கு எனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்படும். பால் உப பொருட்கள் தயாரிப்பதில் தான் ஒரு நிறுவனத்திற்கு கூடுதல் இலாபம் பெற இயலும். பால் உப பொருட்களை அதிகளவில் உற்பத்தி பன்னீர், யோகட் உள்ளிட்டவற்றை செய்து சந்தை படுத்துவதில் கூடுதல் இலாபம் பெற இயலும். இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்படும் என கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார். இப்பேரவை பொதுக்கூட்டத்தில் .கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தலைமையில், நாமக்கல் ஆட்சியர் முன்னிலையில், நாமக்கல் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கான பொது துணைவிதியை திருத்தம் செய்திடல், தணிக்கை அறிக்கை வாசித்து அங்கீகரிக்க ஒப்புதல், இலாப பிரிவினை அடிப்படையில் உறுப்பினர் சங்கங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியதை அங்கீகரித்தல், வரவு செலவு பட்டியல் அங்கீகரித்தல், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திடமிருந்து 13 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள நிலத்தை 75 வருடத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் என்.எம்.ஆர் 180 நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு நவீன தானியங்கி பால் பண்ணை அமைக்கப்பதற்காக பெற்று கொண்டது, ரூ.89.29 கோடியில் நவீன தானியங்கி பால் பண்ணை அமைத்தல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் மருத்துவர்.ரா.சண்முகம், துணைப்பதிவாளர் (பால்வளம்) ஐ.சண்முகநதி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் ம.கஇராஜேந்திரன், உதவி பொது மேலாளர் (பொ) மருத்துவர்.கா.சின்னுசாமி, நிர்வாக மேலாளர் திருமதி ரா.சுகன்யா, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.