சேலத்தில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை
போலீசார் விசாரணை
சேலம் குகை நெய்மண்டி ஆசாரி தெருவை சேர்ந்தவர் வினோத்கண்ணன் (வயது 39). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். வினோத்கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. நேற்று அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர். சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் வினித் (27). இவர் கூரியர் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இருந்தாலும் அவருக்கு நிரந்த வேலை ஏதும் கிடைக்காததால் திருமணம் வரன் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த வினித் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மணியனூரை சேர்ந்தவர் மாணிக்கம் (35). கூலித்தொழிலாளி. இவருக்கு மணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணிக்கம் மனமுடைந்து இருந்து வந்தார். சம்பவத்தன்று மாணிக்கம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.