திருப்பூரில் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு மனித சங்கிலி போராட்டம்!
திருப்பூரில் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருப்பூரில் 3 ,புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்!! இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தன இந்நிலையில், 3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடுமுழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன் மாவட்டத் தலைவர்.பூபேஷ் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்ற முன்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் மத்திய அரசு இந்த புதிய சட்டங்களை திரும்பப் பெரும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இந்த போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.