கல்வடங்கம் காவிரி ஆற்றில் மேளதாளங்கள் முழங்க 3வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் கரைப்பு...
சங்ககிரி:கல்வடங்கம் காவிரி ஆற்றில் மேளதாளங்கள் முழங்க 3வது நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்....
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றில் 3வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் விசர்ஜனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தி விழா கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனையடுத்து சேலம், திருச்செங்கோடு, சங்ககிரி, எடப்பாடி, இளம்பிள்ளை, சீரகாபாடி, கொங்கணாபுரம், ஜலகண்டாபுரம், மகுடஞ்சாவடி, வைகுந்தம், தேவூர், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வழிபாட்டிற்கு பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் மேளதாளமாக ஊர்வலமாக எடுத்து வந்து கல்வடங்கம் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்தனர். ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளை பக்தர்கள் விசர்ஜனம் செய்ய வந்ததையடுத்து கல்வடங்கம் காவிரி ஆற்றில் கூட்டம் அதிகரித்தது. அதனையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.