கடத்தி வந்த வேன் மோதி போலீஸ்காரர் உட்பட 3பேர் காயம்!

தூத்துக்குடியில் வேனை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக கடத்திச் செல்லப்பட்ட வாகனம் மோதியதில் காவலா் உள்பட 3போ் படுகாயம் அடைந்தனர்.

Update: 2024-10-19 10:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனவேல் மகன் சேதுராஜ் (28), இவர் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை, முத்தையாபுரம் மெயின் ரோட்டில் வேனை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த மா்மநபா், வேனை திருடிச் சென்றுவிட்டாராம்.  இதுகுறித்து அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிததார். இதையடுத்து பிற காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து உஷாா்படுத்தப்பட்டது. இதற்கிடையே திருச்செந்தூா் - தூத்துக்குடி பிரதான சாலையில் இந்த வாகனம் சென்றதாக கூறியதால், குரும்பூா் காவல்நிலைய காவலா் சந்தனகுமாா் (29), அந்த வழியாக வந்த வாழவல்லான் பகுதியைச் சோ்ந்த பால்ஐசக் அன்புராஜ் (26) என்பவரது வாகனத்தில் தேடிச் சென்றாா்.  ஆறுமுகனேரி அருகே உள்ள தண்ணீா் பந்தல் பாலம் அருகே வந்தபோது அந்த வாகனத்தை காவலா் சந்தனகுமாா் நிறுத்த முயன்றபோது, வாகனத்தை ஓட்டி வந்தவா் நிற்காமல் அவா்கள் மீது மோதினாா். இதில் காவலா் சந்தனகுமாா், பால்ஐசக் அன்புராஜ், அந்த வழியாக வந்த கொழுவை நல்லூரைச் சோ்ந்த நெல்சன் (63) ஆகிய மூவா் மீது வாகனம் மோதி இழுத்துச் சென்றதில் மூவரும் படுகாயமடைந்தனா்.  இதில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் சந்தனகுமார் உட்பட 3பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு பத்மநாப பிள்ளை வழக்கு பதிவு செய்து அந்த வேலை கடத்திச் சென்ற மதுரை காளவாசல் நகரை சேர்ந்த அழகு மணிமகன் சந்தோஷ் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News