பல்லடத்தில் தீப்பிடித்து எரிந்த கார் 3 பேர் உயிர்த்தபினர்

பல்லடம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் 3பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;

Update: 2024-12-23 00:40 GMT
உடுமலையிலிருந்து பல்லடம் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த கார் பல்லடம் உடுமலை மெயின் ரோட்டில் புள்ளியப்பன் பாளையம் பிரிவு அருகே வந்தபோது திடீரென்று நின்றுவிட்டது. காரில் நிரம்பிய கேஸ் தீர்ந்து போனதால் அதன் ஓட்டுனர் பெட்ரோல் மூலம் காரை இயக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென காரின் முன் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதற்கு காரில் இருந்த 3 பேர் அவசரமாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயர்த்த பின்னர். பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பல்லடம் காவல் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்குள் காரின் பெரும் பகுதி கீழே எறிந்து சேதமாகியது தீ விபத்து குறித்து பல்லடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News