விழுப்புரத்தில் 3வது புத்தக கண்காட்சி துவங்கியது
அமைச்சர் பொன்முடி துவங்கிவைத்தார்;
விழுப்புரம் நகராட்சி திடலில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 3வது புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணை சேர்மன் ஷீலாதேவி சேரன், எஸ்.பி., சரவணன், டி.ஆர்.ஓ., அரிதாஸ், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் சித்திக் அலி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க இணை செயலாளர் லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.