மனைவி 3 பிள்ளைகளுடன் மாயம் கணவர் போலீசில் புகார்
மயிலாடுதுறை அருகே ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் ஆசாரி வேலை பார்த்துவரும் நபர் மணிகண்டன்(38) இவரிடம் கோபித்துகொண்டு அவரது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் காணவில்லை என போலீசிர் புகார் அளித்துள்ளார்;
மயிலாடுதுறை அருகே உள்ள ஆக்கூர் மூக்கூட்டு பகுதியில் உள்ள கம்ப்ளக்சில் மணிகண்டன் குடும்பத்துடன் வசித்துவருகிறார், அவரது மனைவி ஆஷிக்காவுக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்றுவருவது வாடிக்கை. சம்பவ தினத்தன்று மதியம் வீட்டிலிருந்த மனைவி, அவரது பிள்ளைகள் 13 வயது 5 வயது பெண்பிள்ளைகள், 7 வயது ஆண்குழந்தை ஆகியோரைக் காணவில்லை, மணிகண்டன் பல்வேறுஇடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால் செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்து தேடிவருகின்றனர்.