முந்திரி பழத்திலிருந்து பயோ மெத்தனால் தயாரிக்க ஆய்வு அறிக்கை வெற்றியடையும் பட்சத்தில் முந்திரி விவசாயிகளுக்கு 3மடங்கு லாபம் கிடைக்கும் என பாஜக மாநில செயலாளர் பேட்டி.
முந்திரி பழத்தில் இருந்து பயோ மெத்தனால் தயாரிப்பதற்க்கான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இது வெற்றியடையும் பட்சத்தில் முந்திரி விவசாயிகளுக்கு மும்மடங்கு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்;
அரியலூர், ஏப்.4- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அஸ்வத்தம்மன் நீண்ட நாட்களாக நம்முடைய பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கக்கூடிய விருதாச்சலம் கும்பகோணம் ரயில் பாதை இணைப்பு துரிதகதியில் அந்த திட்டம் முன்னெடுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது விரைவில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் முந்திரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முந்திரி பழத்திலிருந்து பயோ ஏத்தனாள் தயாரிப்பதற்கான ஆய்வு சென்னை ஐஐடி நடத்தப்பட்டு அதன் ஆய்வறிக்கை மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது முந்திரி பழத்திலிருந்து பயோ எத்தனாள் தயாரிக்க முடியும் இது வெற்றியடையும் பட்சத்தில் இந்த பகுதி முந்திரி விவசாயிகளுடைய லாபம் மும்மடங்காக மாறும். கச்சா எண்ணெய்க்காக மூன்று லட்சம் கோடி செலவு செய்து நம்முடைய இந்திய அரசு இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது பயோ மெத்தனால் தயாரிப்பதற்கான விவசாய பொருட்கள் பட்டியலில முந்திரி பழத்தை இணைக்க வேண்டும் அதற்கான முயற்சியை நாம் முன்னெடுத்திருக்கிறோம். இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் முந்திரி விவசாயிகளுக்கு இப்பொழுது இருப்பதைவிட மும்மடங்கு லாபம் கிடைக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் அதிமுகவோடு கூட்டணி இருக்கா இல்லையாங்கிறதைமேலிடம் தான் சொல்லுவாங்க தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் ஏதேனும் எங்களுக்கு மாற்றங்கள் வேண்டும் என்றோ எங்களுடைய மாநில தலைவர் அண்ணாமலை பற்றி அதிமுகவில் இருந்து எந்த விதமான விஷயமும் பேசப்படவில்லை பாம்பன் பாலம் திறப்பு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று இதில் அரசியல் ரீதியான சந்திப்புகளுக்கு வாய்ப்பில்லை இது முழுமையான அரசு நிகழ்ச்சி. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆயிரம் கோடிக்கு மேலாக தமிழகம் தான் இந்தியாவிலேயே அதிக நிதி வாங்கி இருக்கு 25 கோடி பேர் இருக்கிற உத்தரப்பிரதேசத்தை விட 8 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு அதிகமாக நிதி வழங்கியிருக்கிறது 100 நாள் வேலை வாய்ப்பு தராமல் ஊழல் பண்ணுது யாரு திமுக. தமிழகத்திற்காக நிதியை அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி. அதை கிள்ளி கூட பொதுமக்களுக்கு கொடுக்காமல் திராவிட மாடல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது கேட்டதை விட அதிகமாக தேவையை விட அதிகமாக மத்திய அரசு கொடுத்துக் கொண்டே இருக்கிறது கொடுக்காத ஒரே நிதி என்றால் அது கல்விக்கான 2000 கோடு நிதிதான். அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளின் அளவிற்கு தரம் உயர்த்துவதற்கு திராவிட மாடல் அரசு சம்மதிக்கட்டும் அந்த 2000 கோடியும் வந்துவிடும் கேட்டதை விட அதிகமாக இந்த திராவிட மாடல் அரசுக்கு மத்திய அரசு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது இதுதான் உண்மை இந்த நான்கு ஆண்டுகளாக பஞ்சப்பாட்டு பாடுவதை தவிர திமுக என்ன அரசியல் செய்திருக்கிறது மக்களுக்கு என்ன சார் செஞ்சீங்க என கேள்வி எழுப்பினார் கச்சத்தீவை தாரை வார்த்தது கருணாநிதி அவர்கள் பண்ணின தப்பு இந்திராவினுடைய காட்டாச்சிக்கு பயந்து இந்திராவின் அதிகாரத்திற்கு பயந்து தமிழ் சமூகத்திற்கு ஒரு மிகப்பெரிய மறக்க முடியாத அவமானகரமான ஒரு மிகப்பெரிய துரோகத்தை செய்தவர் கருணாநிதி. இன்றைக்கு அந்த துரோகத்தை சரி செய்வதற்கான முயற்சியை மத்திய அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது தீர்மானம் போட்டாலும் போடாட்டியும் நாங்கதான் கச்சத்தீவை மீட்க போறோம் அது கண்டிப்பாக நடந்தே தீரும் கச்சத்தீவு 1974 தாரை வார்க்கப்படும் பொழுது பாராளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தான் அன்றிலிருந்து இன்றுவரை கச்சத்தீவுக்காக பேசிக் கொண்டிருக்கிற ஒற்றை இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான் தமிழ் மண்ணில் இருந்து கொண்டிருக்கிறது கச்சத்தீவு நாளைக்கு மீட்கப்பட போகிறது என்று சொன்னாலும் அது பாரதிய ஜனதா கட்சியால் மட்டும்தான் சாத்தியமாக போகிறது என கூறினார்.பாரதிய ஜனதா கட்சி அரியலூர் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட உடன் இருந்தனர்.