சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேருக்கு சிறை தண்டனை
தூத்துக்குடியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆண்டு மற்றும் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.;

தூத்துக்குடியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆண்டு மற்றும் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி மறவன்மடத்தை சேர்ந்த சக்திவேல் மகன் ஜெபராஜ் (27), கதிர்வேல் நகரை சேர்ந்த ஜான் கென்னடி மகன் சூரியராஜன் (34), புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டி மகன் ஜோசுவாராஜ் (25) ஆகிய 3 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு 9 வயது மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம் சாட்டப்பட்ட ஜெபராஜ், சூரியராஜன் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், ஜோசுவாராஜ்க்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துலட்சுமி ஆஜர் ஆனார்.