கனிம வளம்  கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

களியக்காவிளை;

Update: 2025-04-23 03:33 GMT
குமரியில் கனிமவளத்துறையின் முறையான அனுமதி இன்றி கனிமவளம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும்  மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.     இந்நிலையில்  களியக்காவிளை காவல் நிலைய   போலீசார் நேற்று   வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தமிழ்நாடு பாஸ் பயன்படுத்தி கேரளாவிற்குள் நுழைந்த  மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.     மேலும் மேல்புறம் வறத்துவிளை பகுதியை சேர்ந்த செல்லசுவாமி மகன் பினு(33), கீழ்பம்மம் பகுதியைச் சேர்ந்த சிங்கராயன் மகன் டைட்டஸ்(54), கன்னங்கரை பகுதியைச் சேர்ந்த ஜோசப் மகன் செல்வன்(47)  ஆகியோர் மீது களியக்காவிளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News