தூத்துக்குடி மீனவர் கொலை வழக்கில் 3பேர் கைது!

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்னர் மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2025-04-25 07:36 GMT
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்னர் மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  துாத்துக்குடி மாதவன்நாயர் காலனியைச் சேர்ந்த செந்துார்பாண்டி மகன் தங்கராஜ் (22), மீனவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன், வழக்கம் போல அதிகாலை, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு நாட்டுப்படகில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கப்புரத்தை சேர்ந்த மரிய சூசை ஸ்டீபன் மகன் ஆகாஷ் சிலுவை (25), மேட்டுப்பட்டியை சேர்ந்த ஸ்டீபன் மகன் மரிய தாமஸ் யுனோ (25), அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த அந்தோணி சாமி மகன் மைக்கேல் ஜோதிஷ் (20) ஆகிய 3 பேர் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News