கோவை: கைவினைஞர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை கடன் உதவி !

கைவினைஞர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்.;

Update: 2025-05-17 10:26 GMT
கலை மற்றும் கைவினைத் தொழிலை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கைவினைஞர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதில், அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை மானியமும், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்திற்கு 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும் என்று மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முகசிவா இன்று தெரிவித்துள்ளார். இதுவரை 251 விண்ணப்பதாரர்களுக்கு கடன் உதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுடன், 64 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 31.88 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Similar News