கத்தியை காட்டி பணம் பறித்த 3 இளைஞர்கள் கைது

திண்டுக்கல் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த 3 இளைஞர்கள் கைது;

Update: 2025-05-18 02:42 GMT
திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பழனி பைபாஸ் to வத்தலகுண்டு பைபாஸ் பெரிய பள்ளப்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாறைப்பட்டியை சேர்ந்த ராஜா (எ) கப்பர்ராஜா(37), மேட்டூர் காலனியை சேர்ந்த தங்கமணி(28), திண்டுக்கல்லை சேர்ந்த முத்து கருப்பையா(27) ஆகிய 3 பேர் கத்தி மற்றும் உடைந்த பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி கார்த்திகேயன் சட்டை பையில் வைத்திருந்த ரூ.1000 பணத்தை பறித்ததாக கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு 3 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News