குமரி மாவட்டத்தில் முட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட கண்காணிப்பாளர்கள் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று முட்டம் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். முட்டம் சாலையில் சென்றபோது சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் பைக்கில் வந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசவே அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 2 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பைக்கை ஓட்டி வந்த தடிகாரன்கோணம் பகுதி சேர்ந்த ஜெனிபர் (29) என்பவர் தப்பி ஓடி விட்டார். வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்தனர். அவர்கள் தங்கி இருந்த அறையில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் டிரம், பக்கெட், பழங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த தடிக்காரன்கோணம் பகுதியை போனிஷான் (30), நிஷான் (29) மற்றும் சதீஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ஜெனிபரை போலீசார் தேடி வருகின்றனர்.