கோவை: இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேர் கைது !
கோவை, பொள்ளாச்சி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
கோவை, பொள்ளாச்சி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் முன்பு நிறுத்திய வாகனங்கள் திருடுபோனதாக சூரியபிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமாக வந்த ஹென்றி ஜோசப் (24), கபிலன் (24), ஜோதி முருகன் (25) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்களது மறுபடியும் முரண்பட்ட பதில்களையடுத்து காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்து விசாரித்தபோது, வாகனங்களை திருடியது உறுதி செய்யப்பட்டது. இவர்களை நேற்று கைது செய்த போலீசார், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.