ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் உள்ள 3 அரசு மதுபான கடையை மூட அதிகாரிகள் உத்தரவு

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் உள்ள 3 அரசு மதுபான கடையை மூட அதிகாரிகள் உத்தரவு;

Update: 2025-07-21 08:52 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் உள்ள 3 அரசு மதுபான கடையை மூட அதிகாரிகள் உத்தரவு பட்டாசு வெடித்து கொண்டாடிய விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் பாரதி ஜனதா கட்சியினர் கடைகள் மூடப்பட்டதால் ஏமாற்றத்துடன் சென்ற குடிமகன்கள் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் ஒரே இடத்தில் 3 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்த நிலையில், இந்த 3 மதுபான கடைகளை அகற்றக்கோரி பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஆம்பூரை சேர்ந்த இராமசீனிவாசன் என்பவர் பள்ளி வளாகம் மற்றும் வணிக வளாகம் சாலையில் நடந்து செல்லக்கூடிய பெண்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அரசு மதுபான கடை செயல்பட்டு வருவதாகவும் அதனை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 அரசு மதுபான கடைகளையும் வேறுஇடத்திற்கு மாற்ற தமிழ்நாடு மாநில விற்பனைக்கழகம் வேலூர் மண்டல டாஸ்மாக் மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளார், இந்நிலையில் ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளை அகற்ற ஒரு மாத காலம் அவகாசம் கேட்டிருந்த நிலையில், இன்றுடன் ஒருமாதகாலம் முடிவடைந்த நிலையில், டாஸ்மாக் அஅதிகாரிகள் தற்போது 3 கடைகளையும் மாற்று இடத்தில் அமைக்க ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் இன்று அதனை கொண்டாடும் விதமாக பாஜகவினர் மற்றும் விசிகவினர் புறவழிச்சாலையில் உள்ள மதுபானகடையின் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.. அதனை தொடர்ந்து 12 மணி ஆனதால், குடிமகன்கள் மதுபான கடைக்கு வந்த போது மதுபான கடைகள் மூடப்பட்டிருந்ததால் குடிமகன்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Similar News