குமரி மாவட்டம் விரி கோடு பகுதியை சேர்ந்தவர் சிவ சந்திரபோஸ் (27) இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அனிஸ் (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. நேற்று சிவசந்திரபோஸ் காரில் நாகர்கோவில் சென்று விட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அனீஸ் தனது நண்பர்களான சிபு (28), பிரவீன் (28) ஆகியோருடன் சேர்ந்து காரை வழிமறித்து வக்கீலை தாக்கி காயப்படுத்தினர். இதில் பலத்த காயமடைந்த சிவ சந்திரபோஸ் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அனீஸ், சிபு, பிரவீன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.