குமரி மாவட்டம் கீழ்குளம் பகுதி சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (76). இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் கருங்கல் அருகே முள்ளங்கினாவிளையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தில் சென்று பார்த்தபோது அங்கு கிறிஸ்துதாஸ் இறந்து அழுகிய நிலையில் காணப்பட்டார். மனைவி சாந்தி மனநிலை பாதிக்கப்பட்டு, கணவர் அருகில் 3 தினங்களாக சாப்பிடாமல் இருந்தது தெரிய வந்தது. கருங்கல் போலீசார் இறந்த முதியவரின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.