குடும்ப பிரச்சினையில் தொடர்ச்சியான புகார்கள் – 3 பேர் கைது

தாயின் ஆண் நண்பர் குழந்தைகளை தாக்கியதாக புகார், பின்னர் தாயை தாக்கியதாக மகன் மற்றும் சகோதரர் கைது.;

Update: 2025-08-22 05:34 GMT
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த மணிமாலாவின் குழந்தைகள், தாயின் ஆண் நண்பர் கௌதம் தங்களை அடித்து துன்புறுத்தியதாக கடந்த வாரம் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து கௌதம் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நேற்று மணிமாலா தன்னை மகன் கவின் மற்றும் சகோதரர் விஜய் தாக்கியதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Similar News