கதண்டு கடித்து 3 மாணவிகள் காயம்

விபத்து செய்திகள்;

Update: 2025-09-13 07:23 GMT
ஆலங்குடி: வடவாளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் உள்ள மரத்தில் கதண்டு கூடு கட்டியிருந்தது. நேற்று காலை கூட்டில் இருந்து பறந்து வந்த கதண்டுகள் பிளஸ் 2 வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவிகளை துரத்தி கடித்தன. இதில் மேலத்தோப்பை சேர்ந்த அன்புராஜா மகள் ராகவி (17), தண்ணீர்பந்தல்பட்டி முருகேசன் மகள் தர்ஷினி (17), கண்டங்காரன்பட்டி சரவணன் மகள் துர்காலட்சுமி (17) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். மாணவிகளை உதவி தலைமை யாசிரியர் விஜயலட்சுமி மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தார். தகவலறிந்ததும் புதுக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தினர் வந்து மயக்க மருந்து அடித்து கதண்டுகளை அப்புறப்ப டுத்தினர். இதுகுறித்து சம்பட்டிவிடுதி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News