கோவையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் விபத்து : 3 பேர் பலி !
அதிவேக கார் லாரி மீது மோதியது – பெண் உட்பட 3 பேர் பலி.;
கோவையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் மூவர் பலியாகினர். அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கோல்டுவின்ஸ் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பின் பக்கம் மோதியது. இதில் காரில் இருந்த 20 வயது பெண் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதும் கோவை பீளமேடு மற்றும் தெற்கு தீயணைப்பு துறை வீரர்கள் நொறுங்கிய காரை மீட்டு, உடல்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இரவு நேர போக்குவரத்து தடை நீக்கப்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.