கோவை: விபத்து - கல்லூரி மாணவி உட்பட 3 பேர் பலி !

அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதி சிதைந்து நொறுங்கியது – சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.;

Update: 2025-10-16 04:57 GMT
கோவை அவிநாசி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலம் அருகே அதிவேகமாக சென்ற கார் சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதியதில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மரணமடைந்தவர்கள் ஒண்டிப்புதரைச் சேர்ந்த ஆரிப், ஹோப் காலேஜ் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஷேக் உசேன் மற்றும் செல்வபுரத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவி சத்யபிரியா என போலீசார் தெரிவித்தனர். இவர்கள் இரவு நேரத்தில் 160 கிமீ வேகத்தில் காரில் மேம்பாலத்தின் மீது சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் கார் நொறுங்கி சிதறியது. மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் அதிவேகமாக சென்று மோதும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News