திருச்செங்கோடுஅருகேவட்டூரில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கம்பத்து வீரன் திருவிழா ஆயிரக்கணக்கில் கிடாவெட்டி கறி விருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கொண்டாட்டம்
திருச்செங்கோடுஅருகே உள்ள வட்டூர் பகுதியில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கம்பத்து வீரன் கோவில் திருவிழா இந்த திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டி கம்பத்து வீரனுக்கு பலியிடப்பட்டன திருவிழாவை முன்னிட்டு இந்தப் பகுதி மக்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு அசைவ விருந்து கொடுத்தனர்;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது வட்டூர் இந்த பகுதியில் கம்பத்து வீரனுக்கு கோவில் உள்ளது இந்த கோயிலில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கம்பத்து வீரனுக்கு விழா எடுத்து அசைவ விருந்து கொடுத்து வருகிறார்கள் மேளதாளம் முழங்க அரிவாள்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலில் இருந்து படுகள திடலுக்கு பூசாரிகள் வந்தனர். பெரிய திடலில் ஆடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் பிடித்திருந்தனர். பக்தி ஆவேசத்துடன் வந்த பூசாரிகள் வரிசையாக ஆடுகளை பலியிட்டு அதில் வெளிப்பட்ட ரத்தத்தை சோற்றில் பிசைந்து எடுத்துச் சென்று மயான காட்டில் வீசிவிட்டு வந்தனர். அதுவரை இவர்களது குலதெய்வமான பெருமாள் சுவாமிக்கு திரை இட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த பூஜை முடிந்த பிறகு திரை விலக்கப்பட்டு கோயிலில் பூஜைகள் நடைபெற்றது. அனைத்து வீடுகளிலும் அசைவ விருந்து தயார் செய்யப்பட்டு உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கினர். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்த கம்பத்து வீரன் திருவிழாவில் கலந்து கொள்ள டெல்லி, மும்பை ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாமக்கல் சேலம் ஈரோடு கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்து வெள்ளை பையன் என்கின்ற வடமலை என்ற முதியவர் கூறும் போது கம்பத்து வீரனுக்கு வட்டூர் பகுதியில் கோயில் உள்ளது அந்தக் கோயில் திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் ஆயிரம் ஆடுகளுக்கு மேல் பலியிடப்பட்டு அதன் ரத்தத்தை சோற்றில் பிசைந்து மயான காட்டில் எரிந்து விட்டு வந்து விடுவோம். அதுவரை பெருமாள் சாமி திரை இடப்பட்டிருக்கும். அதன்பின் திரைகள் விலக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்று கூறினார் இந்த திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துகிறோம் என தெரிவித்தார். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கம்பத்து வீரன் அருள் பெற்றனர்.