கோவை: ஆம்னி பஸ்சில் 3½ கிலோ தங்க நகை கொள்ளை – 2 பேர் கைது !

சங்ககிரியில் ஆம்னி பஸ் பயணத்தின் போது நடைபெற்ற கொள்ளையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் மீட்பு.;

Update: 2025-09-19 05:39 GMT
கோவை நகைப்பட்டறை ஊழியரிடம் இருந்து ஆம்னி பஸ்சில் 3½ கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோவைச் சேர்ந்த சங்கர் (44) புதுச்சேரிக்கு தங்க நகைகள் கொண்டு சென்றபோது, சங்ககிரி சுங்கச்சாவடி அருகே பஸ்சில் இருந்து இறங்கி டீ குடிக்கச் சென்ற வேளையில், அவரது பையை மர்ம நபர் பறித்து சென்றார். ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக சங்ககிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மூன்று தனிப்படை போலீசார் விசாரணையில், சித்தாபுதூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (57), கடலூரை சேர்ந்த மெரிஜா (28) ஆகியோர் திட்டமிட்டு நகைகளை பறித்தது உறுதியானது. இருவரும் நேற்று கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 4.34 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News