சென்னை, பெங்களூரு, படவேடு என 3 வழித்தடங்களில் 4 புதிய பேருந்துகள் இயக்கிவைக்கப்பட்டன.

பேருந்துகளை தொகுதி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.;

Update: 2025-04-24 18:21 GMT
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து சென்னை, பெங்களூரு, படவேடு என 3 வழித்தடங்களில் 4 புதிய பேருந்துகள் வியாழக்கிழமை இயக்கிவைக்கப்பட்டன. ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை வழித்தடத்தில் 2 பேருந்துகளும், பெங்களூருக்கு ஒரு பேருந்தும், படவேடுக்கு ஒரு பேருந்து என 4 புதிய பேருந்துகள் இயக்கிவைக்கப்பட்டன. பேருந்துகளை தொகுதி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், நகா்மன்ற தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, எம்.சுந்தா், எஸ்.மோகன், ஆரணி அரசுப் பணிமனை கிளை மேலாளா் ராமு, தொழிலாளா் முன்னேற்றச் சங்க பேரவைச் செயலா் சௌந்தரராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Similar News