கரூரில் ஆண்களுக்கான எட்டாம் ஆண்டு மாநில அளவிலான 3 x 3 கூடைப்பந்து இறுதி போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.

கரூரில் ஆண்களுக்கான எட்டாம் ஆண்டு மாநில அளவிலான 3 x 3 கூடைப்பந்து இறுதி போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.

Update: 2024-08-05 05:21 GMT
கரூரில் ஆண்களுக்கான எட்டாம் ஆண்டு மாநில அளவிலான 3 x 3 கூடைப்பந்து இறுதி போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில், கரூர் டெக்ஸ் சிட்டி கூடை பந்து கழகம் மற்றும் கரூர் மாவட்ட கூடை பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான 8-ம் ஆண்டு மாநில அளவிலான 3 X 3 கூடைப்பது போட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் கோவை, கரூர், திண்டுக்கல், சேலம், மதுரை, ஈரோடு, நாமக்கல், திருச்சி,அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி முழுவதும் லீக் முறையில் நடைபெற்றது. கடைசி நான்கு போட்டிகள் மட்டும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது.நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில்திண்டுக்கல் bbc அணியும் கோவை வெஸ்டன் போலீஸ் அணியும் மோதியதில் 15க்கு 8 என்ற புள்ளி கணக்கில் திண்டுக்கல் பிபிசி அணி சேம்பியன் பட்டத்தை வென்றது. கோவை ஜெயபாரதி அணி 3-ம் இடத்தையும், நாமக்கல் எஸ் எம் பி அகாடமி அணி 4-வது இடத்தையும் பிடித்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சுழல் கோப்பையும் கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Similar News