கிடாரிப்பட்டி ஊராட்சியில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்கள்
காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார்
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் கிடாரிப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 30.82 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்களை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து மாணவ மாணவியரின் கல்வி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் புதிய வகுப்பறை கட்டிடங்களை கிடாரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா மதிவாணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீரணன்@தவமணி, ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி,மேலூர் வட்டார கல்வி அலுவலர் அழகுமீனா, மேலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தினகலாவதி உலகநாதன், உதவி பொறியாளர் மணிமாறன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன்,ஓவர்சியர் ராகுல், உதவி திட்ட அலுவலர்,பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி உதவி தலைமை ஆசிரியை ஜீவரத்தினம், மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனபாலன், உறுப்பினர்கள்,மாணவ மாணவிகள் பெற்றோர் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்