மணவாடியில் ரூ.30 லட்சம் மதிப்பில் தார் சாலை மேம்படுத்தும் பணிக்கு பூமி பூஜை.

மணவாடியில் ரூ.30 லட்சம் மதிப்பில் தார் சாலை மேம்படுத்தும் பணிக்கு பூமி பூஜை.;

Update: 2025-06-27 08:08 GMT
மணவாடியில் ரூ.30 லட்சம் மதிப்பில் தார் சாலை மேம்படுத்தும் பணிக்கு பூமி பூஜை. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணவாடி ஊராட்சியில் ,அய்யம்பாளையத்தில் இருந்து பெருமாள்பட்டி வரை தார் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை இன்று எம் எல் ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் மதிப்பில் நடைபெற்ற இந்த பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன் , வட்டார வளர்ச்சி அலுவலர் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.

Similar News