மருத்துவர் வீட்டில் 30 பவுன் திருட்டு
தனியார் மருத்துவமனையில் மருத்துவர் பணியாற்றி ஒருவர் உமர் பாஷா முப்பது பவுன் நகை 5 லட்சம் பணம் திருட்டு பெரம்பலூர் போலீசார் விசாரணை;
பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள உழவர்சந்தை அருகே வசித்து வருபவர் உமர்பாஷா, இவர் டாக்டராக சிறுவாச்சூரில் உள்ள தனியார் பல்கலைக் கழக மருத்துவமனையில பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி, குழந்தைகள் சென்னைக்கு சென்று விட்டனர். வேலைக்கு போன உமர்பாஷா திரும்பி வந்து வீட்டை பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் இருந்த, 30 பவுன் ரொக்கம் ரூ. 5லட்சம் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. உடனடியாக பெரம்பலூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடனும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.