நாகர்கோவில் : 30 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி

நான் முதபவன் திட்டத்தில்;

Update: 2025-08-21 05:51 GMT
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அறிவுசார் மையத்தில் நேற்று நடைபெற்றது. பி.எஸ்.சி. நர்சிங் மற்றும் செவிலியர் பட்டய படிப்பு முடித்த சுமார் 30 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி தொடர்பான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. 3 மாத காலம் இந்த பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சி முகாமை கலெக்டர் அழகுமீனா தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம் முடிவடைந்து அதன் பின் நடைபெறும் தேர்வில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு ஜெர்மனியில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் பலனடைவார்கள். அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று கலெக்டர் அழகுமீனா கூறினார்.

Similar News