பொள்ளாச்சியில் பேருந்து-லாரி மோதி விபத்து : நடத்துநர் உயிரிழப்பு, 30 பேர் காயம் !

பொள்ளாச்சி அருகே பேருந்து-லாரி மோதி விபத்து : நடத்துநர் உயிரிழப்பு, பலர் படுகாயம்.;

Update: 2025-09-18 08:33 GMT
பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றிருந்த கேஸ் சிலிண்டர் டேங்கர் லாரியை அரசு பேருந்து மோதியதில், நடத்துநர் பாலசுப்பிரமணி (44) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் காசிராஜன் (52) இயக்கிய பேருந்தில் பயணித்த 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News