ராயக்கோட்டை:காரில் கடந்த முயன்ற 300 கிலோ குட்கா கடத்திய டிரைவர் கைது.

ராயக்கோட்டை:காரில் கடந்த முயன்ற 300 கிலோ குட்கா கடத்திய டிரைவர் கைது.;

Update: 2025-06-28 12:23 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ராயக்கோட்டை போலீசார் நேற்று காலை ராயக்கோட்டை அண்ணா சிலை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 20 பைகளில் தலா 15 கிலோ வீதம் மொத்தம் 300 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் நெல்லை மாவட்டம் அருகே உள்ள ராம் நகரை சேர்ந்த ஏசாயா தேவக்கண் (28) என்பது தெரிய வந்தது. இதை அடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.1 அரை லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News