பர்னிச்சர்கடையின் பூட்டை உடைத்து 30000 பணம் மற்றும் 3 பவுன் நகை திருட்டு*
பர்னிச்சர்கடையின் பூட்டை உடைத்து 30000 பணம் மற்றும் 3 பவுன் நகை திருட்டு*;
விருதுநகரில் உள்ள பர்னிச்சர்கடையின் பூட்டை உடைத்து 30000 பணம் மற்றும் 3 பவுன் நகை திருட்டு - இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை விருதுநகர் - மல்லாங்கிணறு சாலையில் திருமுருகன் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை செயல்பட்டு வருகிறது இந்த பர்னிச்சர் கடையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை முடித்துவிட்டு உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். காலை வந்து பார்த்த பொழுது கடையின் பீரோவில் இருந்த ரூ 30000 பணம் மற்றும் மூன்று பவுன் தங்க நகை மாயமானது கண்டு அதிர்ச்சடைந்த அவர் இது குறித்து கிழக்கு காவல் நிலையத்திற்கு திருமுருகன் தகவல் தெரிவித்தார் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர் முதற்கட்ட விசாரணையில் மொட்டை மாடியின் வழியாக மேலே உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் பீரோவின் பூட்டை உடைத்து ரூ30000 பணம் மற்றும் 3 பவுன் நகையை திருடி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கிழக்கு காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்