மெரினா நீச்சல் குளம் இன்று முதல் 31 வரை இயங்காது

பராமரிப்​புப் பணி​கள் காரண​மாக மெரினா நீச்​சல் குளம் இன்று முதல் ஜூலை 31 வரை இயங்​காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-07-11 02:17 GMT
இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில், சென்னை மாநகராட்சி சார்​பில் மெரினா கடற்கரை​யில் நீச்​சல்குளம் பராமரிக்கப்​பட்டு வரு​கிறது. பொது​மக்​கள் கட்டண அடிப்​படை​யில் பயன்​படுத்த அனு​ம​திக்​கப்​பட்டு வரு​கின்​றனர். இந்த நீச்​சல் குளத்​தில் தண்​ணீர் சுத்​தி​கரிப்பு மையம் தங்​கு தடை​யின்றி இயங்க ஏது​வாக, 135 மீ குழாய் அமைத்​தல், 1.80 மீ. விட்​டம் கொண்ட 9 ஊறு குழிகள் பொருத்​துதல், சோதனை வெள்​ளோட்​டம் உள்​ளிட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்பட உள்​ளன. இந்​தப் பணி​களுக்​காக மெரினா நீச்​சல் குளம்​ இன்று (ஜூலை 11) முதல் 31-ம் தேதி வரை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News