அக். 31 தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் வரிச்சலுகை
அக். 31 தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் வரிச்சலுகை குமாரபாளையம் நகராட்சி அறிவிப்பு;
குமாரபாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம்,, மற்றும் வரியில்லா இனங்கள் ஆகியவற்றினை நகராட்சி கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : குமாரபாளையம் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் தங்கள் 2025..2026 இரண்டாம் அரை ஆண்டிற்கான சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால் 5 சதவீதம் வரி சலுகை வழங்கப்படும். அக். 31 தேதிக்குள் சொத்து வரியினை செலுத்துபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. குமாரபாளையம் நகராட்சி பொதுமக்கள் இச்சலுகையினை பயன்படுத்தி இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை அக். 31க்குள் நகராட்சி கருவூலத்தில் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.