கங்கைகொண்ட சோழபுரத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கனக விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனால் வழிபாடு செய்யப்பட்ட அருள்மிகு கணக்க விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது;

அரியலூர், பிப்.2- அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழனால் வழிபாடு செய்யப்பட்ட அருள்மிகு கனக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மங்கள இசை உடன் கனக்க விநாயகருக்கு கணபதி ஹோமம் லக்ஷ்மி நவக்கிரக கோபத்துடன் மகா தீபாரதனை நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை 108 மூலிகைகள் பழங்களால் தல தானியங்களால் யாகம் துவங்கி இரண்டாம் யாகசாலை பூஜையும் அடுத்த நாளான நேற்று மாலை மூன்றாம் காலையாக தலை பூஜை துவங்கி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று காலை 7:30 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து இடித்து 10 மூலிகைகள் பழங்களால் நவதானியங்களால் சாத்தப்பட்டு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்று பூர்ணாவதி மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு 9:45 மணிக்கு கடன் புறப்பட்டு 10:30 மணிக்கு கணக்க விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது இந்த பிரசித்தி பெற்ற மகா கும்பாபிஷேகான கங்கைகொண்ட சோழபுரம் குருவாளப்பர் கோவில் உள்கோட்டை இளையபெருமாள் நல்லூர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம பக்தர்கள் வந்திருந்து கண்டுகளித்தனர் இவ் விழா ஏற்பாட்டினை கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் பகுதி பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.கும்பாபிஷேக் முன்னிட்டு போலீசார் மருத்துவத்துறையினர் தீயணைப்பு துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் செய்யப்பட்டிருந்தனர்.