திருவள்ளூர் மாவட்டத்தில் 34 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் 34 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறப்பு. அமைச்சர் சாமு நாசர் திறந்து விற்பனையை துவக்கி வைத்தார்;
திருவள்ளூர் மாவட்டத்தில் 34 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறப்பு. அமைச்சர் சாமு நாசர் திறந்து விற்பனையை துவக்கி வைத்தார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் இன்று திறந்து வைத்தார். தொழில் முனைவோர்களுக்கு 15 முதல்வர் மருந்தகங்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு 19 முதல்வர் மருந்தகங்கள் என 34 முதல்வர் மருந்தகங்களை ஒதுக்கீடு செய்து திறந்துள்ளனர் இதன் மூலம் டிபார்ம் பி பார்ம் பயின்ற 15000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் படித்த இளைஞர்களுக்கு கூடுதல் நிதி உதவி கிடைப்பதுடன் பொதுமக்களுக்கு சந்தை விலையை விட 75% குறைவாக மருந்துகள் விற்பனைக்கு கிடைக்கும் என்று ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்