எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு;

Update: 2025-06-01 12:37 GMT
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பட்டதாரி இளைஞா்கள், இளம் பெண்களுக்கு வங்கித் துறை, ரயில்வேத் துறை, குடிமைப் பணித் தோ்வுகளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த வகையில், இந்தப் பயிற்சிக்கு தகுதியான மாணவா்களைத் தோ்வு செய்வதற்கான முதல் நிலைத் தோ்வு தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது. இந்த தோ்வுக்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் 567 போ் விண்ணப்பித்தனா். திண்டுக்கல் புனித வளனாா் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி, புனித லூா்து அன்னை அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் இதற்கான தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தத் தோ்வை 340 போ் எழுதினா். 227 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

Similar News