மாமனை கொன்று தலைமறைவான மச்சான் 35 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மாமனை கொன்று தலைமறைவான மச்சான் 35 ஆண்டுகளுக்கு பிறகு கைது;

Update: 2025-03-04 15:17 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்புத் துறையில் பீரங்கி தொழிற்சாலை சார்ஜி மேனாக வேலை செய்தவர் ரஞ்சித் சிங் ராணா இவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் மெரிட் கிராமத்தை சேர்ந்தவர் கடந்த 1991 ஆம் ஆண்டு தனது ஆவடியில் இரண்டாவது மனைவியான மதுமதி மற்றும் அவரது தம்பி பாலு என்பவரால் கொலை செய்யப்பட்டார்.. மத்திய அரசின் உயர்ந்த பதவியில் இருந்தவர். ரஞ்சித் சிங் ராணா இரவு நேரத்தில் இரண்டாவது மனைவி மதுமதியை அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதால் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார்..கொலை நடந்தபோது மதுமதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்.முக்கிய குற்றவாளி பாலு தலைமறைவானார்.பாலுவை பிடிக்க அம்பத்தூர் நீதிமன்றத்தில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.. பாலு குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறாததால் கடந்த 34 ஆண்டு காலமாக வழக்கு நிலுவையில் இருந்தது.. இது தொடர்பாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் வழக்கை முடிக்க உத்தரவிட்டதன் பேரில் ஆவடி உதவியாளர் கனகராஜ் மற்றும் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து பாலுவை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டது.. பம்பாய்,டெல்லி போன்ற வட மாநிலத்தில் தலைமறைவாகி வேலை செய்து வந்த நிலையில் சொந்த ஊரான திருச்சி வந்து பின்னர் விருதுநகர் அருகே திருமணம் ஆகி குழந்தையுடன் காவல்துறையினர் யாரும் தன்னை தேடவில்லை என எண்ணி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். பெயர் மற்றும் ஊர் வைத்துக் கொண்டு கடந்த 1 மாதங்களாக தேடுதல் பணியை ஆவடி தனிப்படை போலீசார் துவக்கிய நிலையில். விருதுநகரில் வைத்து பாலுவை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News