உதகையில் இருந்து மதுரைக்கு 35 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி...

பேருந்து பயணிகள் வேதனை;

Update: 2025-04-01 11:49 GMT
  • whatsapp icon
உதகையில் இருந்து மதுரைக்கு 35 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி... நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை உதகையிலிருந்து மதுரைக்கு 35 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து லவ்டேல் ஜங்ஷன் என்ற பகுதியில் பழுதாகி நின்றது. இந்த பேருந்தில் காலை நேரங்களில் குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மற்றும் ஊசி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பல்வேறு பணிகளுக்காக சமவெளிக்கு சென்ற பயணிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், உதகையில் இருந்து மதுரைக்கு சென்ற அரசு பேருந்து பாதி வழியில் பழுதாகியதால் அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News