சுனாமி குடியிருப்பு 36 குடும்பங்களுக்கு வீட்டு மனை கேட்டு மனு

தரங்கம்பாடி அருகே கேசவன் பாளையத்தில் சுனாமி குடியிருப்பில் கூட்டுக்குடும்பம் நடத்தி வரும் 36 குடும்பத்தினர் புதிய வீட்டுமனையும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர வேண்டி கோரிக்கை மனு அளித்தனர் பத்து ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாகவும் பேட்டி;

Update: 2025-03-24 15:37 GMT
.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கடற்கரை ஓரம் உள்ள கேசவன் பாளையம் கிராம மக்கள் தற்போது சாத்தங்குடி வருவாய் கிராமம், தரங்கம்பாடி பேரூராட்சி ஆறாவது வார்டில் 108 சுனாமி குடியிருப்புகளில்  கடந்த 20 ஆண்டுகளாக 450 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டில் பலர் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.  கடந்த 17 வருடங்களில் திருமணம் ஆகி கூட்டுக் குடித்தனம் மற்றும் ஓட்டு குடித்தனமாக 36 குடும்பத்தினர் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே மேற்படி 36 குடும்பத்தினர்களுக்கும் புதிய வீட்டுமனை பட்டா மற்றும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டிய கடந்த 10 ஆண்டுகளாக முதல்வர் தனிப்பிரிவு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் என பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை தங்களது கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை    மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் தங்களால் புதிய மனை வாங்கி வீடு கட்டி குடி இருக்க வாய்ப்பு இல்லாததால் பட்டியல் சமூகத்திற்கான இலவச வீட்டு மனைகள் வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் அளித்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News