அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
ஜெயங்கொண்டத்தில் அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
அரியலூர், டிச.24- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர அமமுக சார்பாக நகர செயலாளர் முரளி தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37 வது நினைவு நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சேதுராமன்,மாவட்ட பொருளாளர் பொன்முடி ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ.இளவழகன் ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் விஜயகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சௌந்தர்ராஜன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் ஹுமாயின் பாஷா, மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் சுதாகர், மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை தலைவர் சந்திரசேகர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.