சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் 37 லட்சம் மதிப்பு மின்சாதனங்கள் பறிமுதல் !
சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் 5 பயணிகள் கொண்டு வந்த ரூ.37.09 லட்சம் மதிப்புள்ள மின்சாதனங்கள் பறிமுதல்.;
சார்ஜாவில் இருந்து நேற்று கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் பயணித்த திருவாரூர், தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 5 பயணிகளிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் ரூ.37.09 லட்சம் மதிப்புள்ள மின்சாதனங்கள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்த 856 தையல் சிகரெட், 10 டிரோன், 36 மைக்ரோஃபோன்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.