உடுமலை அமராவதி அணையில் இருந்து 38 நாளாக உபரிநீர் வெளியேற்றம்
திருப்பூர் கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர் கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்து ஜூலை பதினெட்டாம் தேதி நிரம்பியது வழியோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது மேலும் நீர் பிறப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் கடந்த 38 நாட்களாக உபரியாக ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகின்றது இந்த நிலையில் கூறியதாவது அமராவதி ஆற்றில் 38 நாட்கள் உபரி நீர் திறக்கப்பட்டாலும் கரூர் திரு முக்கூடலூரில் காவிரி ஆற்றில் உபரி நீர் சென்றடையவில்லை கரூர் ஓத்தமாந்துறை வரை மட்டும் சென்றுள்ளது பாசன பகுதிகளில் போதிய மலை இல்லாத காரணத்தால் பாசனத்தை துவக்கும் வகையில் பழைய பாசனம் அரவக்குறிச்சி முதல் கரூர் வரை உள்ள 10 வலது கரை பாசன கால்வாய்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தார் தற்சமயம் அமராவதி அணையின் மொத்த 90 அடியில் 88.26 நீர் வரத்து விநாடிக்கு 787 கனஅடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது