காந்திகிராம கிராமியப் பல்கலைகழத்தின் 38வது பட்டமளிப்பு விழா
காந்திகிராம கிராமியப் பல்கலைகழத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ். லட்சுமணனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது;
திண்டுக்கல்லில் சின்னாளப்பட்டி பகுதியில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா இன்று 05.10.25 நடைபெற்றது. விழாவிற்கு காந்திகிராம கிராமியப் பல்கலை. வேந்தர் கே.எம். அண்ணாமலை தலைமை தாங்கினார். துணைவேந்தர் ந.பஞ்சநதம் முன்னிலையில், 2022-23, 2023-24 கல்வியாண்டில் தேர்ச்சிப் பெற்ற 2,700 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ். லட்சுமணனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதில், 120 மாணவ மாணவிகள் தங்க பதக்கம் பெற்றனர். மேலும் ஒருவருக்கு இலக்கிய முனைவர் பட்டம், 109 மாணவ, மாணவிகளுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. காந்தி கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வேந்தர் அண்ணாமலை பேசுகையில் :-, பல்கலைக் கழகத்துக்கு NAAC-A++ அங்கீகாரம் கிடைத்தது அனைவரின் ஒருங்கிணைந்த உழைப்பின் பலன் எனவும், பல்கலைக்கழகத்தின் பல பேராசிரியர்கள் உலகின் முன்னணி 2% விஞ்ஞானிகளில் இடம் பிடித்திருப்பதும், அவர்களின் உலக ஆராய்ச்சிக்கு அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். உலகளாவிய முன்னணி பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தங்கள் (MoUs) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதானந்தம், பேராசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.