ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி.

2 லட்சம் நிதியுதவி வழங்கினார் ஆரணி எம்.பி.

Update: 2024-09-18 17:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி செப் 18. ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில் உள்ள ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் இறந்தனர். இறந்த குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ 2 லட்சம் நிதியுதவியை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் புதன்கிழமை வழங்கினார்.. ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் குப்புசாமி-அஞ்சலி தம்பதியின் குழந்தைகள் மோகன்ராஜ்(13), வர்ஷா(9), மற்றும் விநாயகம்-செல்வி தம்பதியின் குழந்தைகள் கார்த்திகா(8), தனுஷ்கா(4) ஆகிய நான்கு சிறுவர்கள் ஏரியில் விளையாட சென்றுள்ளனர் அப்போது ஏரி தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்களும் இறந்தனர். தகவல் அறிந்த ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியனை ஆகியோர் அடையபலம் கிராமத்திற்கு சென்று இறந்த குழந்தைகளுக்கு மலர் மாலை அணிவித்து குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆணைக்கினங்க திமுக சார்பில் இரண்டு குடும்பத்திற்கும் தலா 1 லட்ச ரூபாய் என மொத்தம் 2லட்சம் நிதியுதவியை ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் வழங்கினார்.. மேலும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இறந்த குழந்தைகளுக்கான நிவாரண தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது விரைவில் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்றார். நான்கு குழந்தைகள் இறந்ததால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அப்போது உடன் ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் கௌரி, திமுக முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், நகர்மன்ற தலைவர் ஏ.சி.மணி, மாவட்ட துணைசெயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் எம்.சுந்தர், துரை மாமது, எஸ்.மோகன் உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் அதிமுக சார்பில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் இறந்த குழந்தைகளுக்கு மலர் மாலை அணிவித்து அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் மேலும் இரு குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார் அப்போது உடன் ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஊராட்சித் தலைவர் அசோக்குமார் ஆகியோர் இருந்தனர்.

Similar News