குமரி : தனியார் நிறுவன ஊழியர் தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

திருவட்டாறு

Update: 2024-12-27 05:26 GMT
குமரி மாவட்டம் திருவட்டாறை அருகே பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்சிங் டேவிட் ராஜன் (55) இவர் நாகர்கோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்காக அவர் வெட்டூர்ணிமடம் பகுதியில் குடும்பத்துடன் வாடகைக்கு வீட்டில் வசித்து வருகிறார். வாரந்தோறும் பூவன்கோட்டில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.      ஜெய் சிங் டேவிட் ராஜனுக்கும்,  அதே பகுதியை சேர்ந்த விமல் (55) என்பவருக்கும் மதில் சுவர் கட்டுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெய்சிங் டேவிட் ராஜன் வீட்டிலிருந்து வெளியே வந்த போது, அங்கு வந்த விமல் மற்றும் அவரது நண்பர்கள் நரேஷ் (32), நிஜத் (29) உட்பட நான்கு பேர் சேர்ந்து ஜெயசிங் டேவிட் ராஜனை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.        இதில் படுகாயம் அடைந்த ஜெயசிங்  டேவிட் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு  சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News